தமிழக அரசின் அடுத்த ஸ்பெஷல் பஸ்.!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு தமிழக அரசு ஃபேம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தலா 100 பேருந்துகள், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கும், தலா 50 எலக்ட்ரிக் பஸ் சேலம், ஈரோடு, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவடங்களுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு என 25 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இந்த மாதத்தில் முதல் இரண்டு மின்சார பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் திருவான்மியூர்- சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு-பிராட்வே ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட இருக்கிறது. அசோக் லேலண்ட் தமிழகத்தின் பேருந்து உற்பத்தியாளராக இருந்து வருகிறது. இந்த வகை பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க இருக்கிறது.

இதற்கிடையில், ஒவ்வொரு பேருந்தின் நீளத்தைப் பொறுத்தும், ஏறத்தாழ ஒரு எலக்ட்ரிக் பேருந்தின் விலை ரூ .1.50 முதல் ரூ .2 கோடி வரை மாறுபடுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பேருந்தையும் வாங்க மத்திய அரசு ரூ .55 லட்சம் மானியம் ஃபேம் 2 ஆம் கட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.