பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவரான மிரியம் ரிவேரா என்னும் பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவருக்கு செய்தி வந்த நிலையில், கணவர் உடன் இல்லாமலேயே, அவரது உடல் மெக்சிகோவில் தகனம் செய்யப்பட்டுள்ளதால் அவரது மரணத்தில் மர்மம் நிலவுவதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் தனது கணவரான டேனியலை தொலைபேசியில் அழைத்த மிரியம், தனக்கு உடல் நலமில்லை என்று தெரிவித்திருகிறார்.
12 மணியளவில் பேசிய மிரியம், 2 மணியளவில் தூக்கில் தொங்கியதாக டேனியலுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை அமெரிக்காவுக்கு அனுப்பும்படி அவர் கோர, அவரது உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது டேனியலுக்கு.
பின்னர் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, மெக்சிகோவுக்கு வர முயற்சி செய்யாதே, வந்தால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளது.
தன மனைவியை பாலியல் தொழிலாளியாகும்படி சிலர் வற்புறுத்தியதாகவும், மறுத்ததால் அவரை கொலை செய்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் டேனியல்.
மிரியமை ஏன் பாலியல் தொழிலாளியாக வற்புறுத்த வேண்டும்? அதற்கு பின்னணியிலும் ஒரு விடயம் இருக்கிறது.
விபத்து ஒன்றில் சிக்கிய மிரியம், தனது சிகிச்சைக்கு ஏராளமான பணம் வேண்டும் என்பதற்காக கொஞ்ச காலம் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளார்.
ஒரு முறை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மிரியமின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக, ஆறு இளைஞர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் ஜெயிக்க, அவர் மிரியமை அழைத்துக் கொண்டு ரொமாண்டிக் விடுமுறை ஒன்றிற்கு செல்ல வேண்டும்.
ஆனால் நடந்தது என்னவென்றால், அவர் மிரியமை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை.
அதேபோல் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆறு பேரும், அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்து, பெரிய தொகையை இழப்பீடாகவும் பெற்றார்கள்.
அவர்கள் வழக்கு தொடர்ந்த காரணமும், வெற்றி பெற்ற நபர் மிரியமை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாததற்கும் ஒரே காரணம்தான்.
அது, மிரியமைக் குறித்த ஒரு விடயத்தை சொல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மறைத்து விட்டார்கள்.
மறைக்கப்பட்ட பிரச்சினைக்குரிய அந்த ஒரு விடயம்? மிரியம் ஒரு பெண்ணல்ல, திருநங்கை என்பதுதான் அது!
யாருக்குமே அவர் ஒரு திருநங்கை என்பது தெரியாததால், பெண் என்று எண்ணி அவர் பின்னால் சுற்றியவர்களும், அவர் மனம் கவர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவரும், உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்ததோடு ஆத்திரமும் அடைந்துள்ளார்கள்.
மிரியமுடைய வாழ்வுதான் மர்மாக இருந்ததென்றால் தற்போது அவரது மரணமும் மர்மமாகிவிட்டதுதான் விந்தை!