முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது மோடி தலைமையிலான அரசில் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜெட்லி. இந்த முறையும் ஆட்சி அமைத்ததும் அவரை அமைச்சரவையில் சேர்ப்பதற்காக மோடி தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அமைச்சரவையில் எனக்கு இடம் ஒதுக்க வேண்டாம் என தானாகவே அரசில் இருந்து விலகிக்கொண்டார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிரதமர் மோடி உடனடியாக புறப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் அருண் ஜெட்லி இன்று காலை எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் பல துறை மருத்துவர்கள் குழுவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். தற்போது அவருடைய இதய துடிப்பு, இரத்த ஓட்டம் இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.