மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படம் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகின்றது. இதில் எம்ஜியாராக நடிக்கும் கதாபாத்திரம் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. தற்பொழுது அதற்கு விடை கிடைத்துள்ளது.
இந்த வருடத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகியது. இந்த படங்கள் போதிய வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ஜெவின் கதாபாத்திரத்தில் பாலிவு நடிகை கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக தனது பயிற்சிகளை அவர் தொடங்கியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வருகிறார். மேலும், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுட்டுள்ளார்.
நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதா முறையாக பரதத்தை பயின்றவர் என்ற காரணத்தால் இந்த படத்தில் பரத நாட்டியம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெவின் வாழ்வில் முக்கிய பங்குவகித்த முன்னாள் மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
எம்ஜிஆர் பாணியில் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என குரல் கொடுத்த அரவிந்த் சாமி தற்போது எம்.ஜி.ஆராக நடிக்க கம்மிட் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. வரும் அக்டொபரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.