பிரித்தானியாவின் பெரும்பாலானா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மில்லியன் கணக்கிலான பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
திடீர் மின் தடையால் போக்குவரத்து மற்றும் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மின் ஜெனரேட்டர்களில் பிரச்னை ஏற்பட்டதாக கூறும் National Grid, உடனடியாக அது சீரமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த மின் தடையால் லண்டன் மற்றும் தென்கிழக்கு, அதே போல் மிட்லாண்ட்ஸ் மற்றும் வட மேற்கு பகுதிகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் ரயில் சேவை தாமதமாகியுள்ளது, சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் ரயில் நிலையங்கள் இருளில் மூழ்கியுள்ளது. King’s Cross பகுதியில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
லூட்டன் மற்றும் நியூகேஸில் பகுதி விமான பயணிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.