விமான நிலையத்திற்குள் கொட்டிய மழை!!

இங்கிலாந்தில் விமான நிலையத்திற்குள் மழை கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். லண்டனில் உள்ள லூட்டன் விமானநிலையப் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் தாளாமல் லூட்டன் விமான நிலையத்தில் மேற்கூரைகளில் பொத்தல்கள் விழுந்தன.

இந்நிலையில் மழையும் சேர்ந்து கொண்டதால் விமானநிலையத்திற்கு உள்ளேயே மழை கொட்டத் தொடங்கியது. பயணிகள் அமரும் இடம், சிற்றுண்டி மையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

லூட்டன் விமான நிலையத்தில் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பயணிகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்ததால் விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி மன்னிப்புக் கோரியுள்ளார்.