முல்லைத்தீவு- சிலாவத்தை பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ள் நிலையில் மற்றுறொருவர் படுகாயமடைந்துள்ளாா்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கொக்குளாய் – முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றிள்ளது.
இதன்போது வீதியினை விட்டு விலகிய வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் பயணித்த மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.