இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த திரைப்படத்தில் முரளியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், இதற்கு விஜய் சேதுபதி சம்மதிக்க கூடாது என பல தமிழ் ஊடகங்களும் இயக்கங்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந் நிலையில் குறித்த திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியிடம் அவருடன் நெருங்கிய சிலர் முன்வைத்த கோட்பாடுகளுக்கு அமையவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக தெரிவிக்கின்றன.