தலைமைக் கழக பேச்சாளர்களின் பயிலரங்கம், திருச்சியில் நாளை (11.08.2019) நடைபெறவிருக்கிறது என்று டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மண்டல வாரியாக நடைபெற்றுவரும் தலைமைக்கழக பேச்சாளர்களின் பயிலரங்கம், இரண்டாவது கட்டமாக நாளை 11.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகிலுள்ள S.R.M.ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் திருச்சி வடக்கு மாவட்டம், திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி மாநகர் மாவட்டம், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், கரூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் ஆகிய கழக மாவட்டங்களின் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இவர்களோடு மேற்கண்ட மாவட்டங்களில் பேச்சாளராக விரும்பும், பேச்சுத்திறனும் கருத்துச் செறிவும் நிறைந்த கழக உடன்பிறப்புகள், கழகத்தின் சார்பு அணிகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயிலரங்கில் பங்கேற்கலாம்.
அப்படி கலந்து கொண்டு தங்களின் பேச்சாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், தலைமைக்கழக பேச்சாளர்களாக தமிழகம் முழுதும் சுற்றிவந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை – கோட்பாடுகளை மக்களிடம் முன் வைக்கும் வாய்ப்பினைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.