குருணாகலில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொல்கஹாவெல பகுதியில் நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியரை இரண்டு பேர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். அத்துடன் அங்கியிருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 27 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.