பிரித்தானிய இளவரசரின் நெருங்கிய நண்பர் தூக்கிட்டு தற்கொலை!

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறார்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த ஜூலை 6 ஆம் திகதி முதல் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சக கைதிகளிட,மும் சிறை அதிகாரிகளிடமும் தம்மை யாரோ கொலை செய்ய முயற்சி மேற்கொள்வதாக கடந்த வாரம் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில், தமது அறையிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை மீட்டு நியூயார்க் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கே அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

எப்ஸ்டீன் தற்கொலை தொடர்பில் முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

66 வயதான எப்ஸ்டீன் கடந்த 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமது நண்பர்கள் உள்ளிட்ட மேட்டுகுடி விருந்தினர்களுக்கு சிறார்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட சமூகத்தில் பிரபலமான நட்பு வட்டம் கொண்ட எப்ஸ்டீன்,

சிறையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் அவர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். எப்ஸ்டீனின் விடுமுறை இல்லத்தில் வைத்தே இளவரசர் ஆண்ட்ரூ சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

மட்டுமின்றி எப்ஸ்டீனின் பாலியல் அடிமையாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் இளம்பெண் ஒருவருடன் இளவரசர் ஆண்ட்ரூ பல முறை தனியாக தங்கியுள்ளார் என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது.