ஈழத்தமிழர்கள் தலையில் பேரிடி விழப்போகிறது……வெளியாகவுள்ள அறிவிப்பு…!!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிந்து கொள்வதற்கு நாட்டில் உள்ள அனைவரும் பொறுமையின்றி காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு இன்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமையை ஏற்றதும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார்.

அப்போது அவர் “கோ” (கோ – என்றால் கோட்டாதான்) எனக் கூறும் போது, பட்டாசு கொளுத்தி கொண்டாட மக்கள் தயாராக இருக்கின்றனர் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டிருந்த நிலையில் இலங்கை மக்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிந்துகொள்ள ஆவலாக உள்ளனர்.

இதேவேளை சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு நிகராக, பாற்சோறு சமைத்து, பலகாரம் செய்து பட்டாசு கொளுத்தி இந்த நிகழ்வினை மக்கள் கொண்டாடி மகிழ வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கட்சி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.