குழு மோதல்! ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்…

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இரு பகுதியினருக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது.

குறித்த மோதல் காரணமாக பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.