சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நயன்தாரா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளாராம்.
ஜிகிர்தண்டா படத்தில் சிறப்பாக வில்லனாக நடித்த இவர் இவ்வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.