பிக்பாஸின் இந்த சீசனின் தந்தை- மகள் என்றால் அது சேரனும் லொஸ்லியாவும் தான். அப்பா… அப்பா.. என லொஸ்லியா கூப்பிடுவதும் இவரும் மகளின் பாசத்தில் நெகிழ்ந்து போவதும் அப்பப்பப்பா..
ஆனால் இதெல்லாம் வந்த புதியதில் தான் இப்போதெல்லாம் அந்தளவில் இல்லை. குறிப்பாக லொஸ்லியாவிடம் மகளுக்குரிய பாசமே இல்லை. அது தான் இன்றைய எபிசோடிலும் தெரிந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் ஏஞ்சலாகவும் பேயாகவும் மாறியிருந்தனர். இதில் ஏஞ்சல் கெட்அப்பை போட்டு கொண்டு லொஸ்லியா, அபிராமி அமர்ந்திருந்தனர்.
மற்ற ஆண்கள் அவர்களில் ஒருவருக்கு ஏஞ்சல் விருதை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தை கூறி வந்த போது, சேரன், தன்னுடைய மகள்(லொஸ்லியா) தனக்கு எப்போதும் ஏஞ்சல் தான், அதனால் நான் இந்த ஏஞ்சல் விருதை அபிராமிக்கு கொடுக்கிறேன். அவள் சிறந்த அறிவாளி, நிறைய திறமை இருக்கிறது என்று கூறி அவரை கட்டியணைத்து கொண்டார்.
என்ன தான் அவர் பெருந்தன்மையாக சொன்னாலும், லொஸ்லியாவிற்கு அதை ஏற்று கொள்ள முடியவில்லை என்பது போன்றே, தன்னுடைய சேலையை சரி செய்வது போன்று, சேரன், அபிராமியை பற்றி பேசியதை கவனிக்காமல் இருந்தார்.
இதோ வைரலாகும் அந்த புகைப்படம்…