விஜய் சொன்னது அப்படியே பலித்துவிட்டது!

விஜய் தற்போது சினிமாவில் மிகப்பெரும் அந்தஸ்தில் இருக்கிறார். அவரின் கடும் உழைப்பும், அமைதியும் இப்படியான ஒரு செல்வாக்கை அவருக்கு கொடுத்துள்ளது எனலாம்.

அவருடன் பைரவா, சர்க்கார் படத்தில் ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் எனலாம். காரணம் அவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடித்த மகாநதி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதே.

சுவாரசியமான விசயம் என்னவெனில் இப்படத்தில் ரிலீஸ்க்கு முன் சர்க்கார் படப்பிடிப்பில் விஜய்க்கு அவர் மகாந்தி படத்தின் ஒரு கிளிப்பிங்கை காட்டினாராம்.

விஜய் அதை பார்த்துவிட்டு நிச்சயமாக உனக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினார். அன்று அவர் சொன்னது போல் நடந்துவிட்டது என கூறி பெருமைப்பட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.