கீர்த்தி சுரேஷ் .. தந்தையின் சம்மதம் எவ்வாறு கிடைத்தது தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.

நடிகை மேனகாவின் மகளான இவர் மோகன்லாலின் மலையாள படமான கீதாஞ்சலியின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

இப்படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன், கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ்குமாரிடம் எவ்வாறு அனுமதி வாங்கினார் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கீர்த்தி நடிக்க அவரது தந்தையிடம் நேரடியாக வந்து அவரது நண்பர் ப்ரியதர்ஷன் கேட்டப்போதும் பிடிவாதமாக மறுத்துள்ளார், சுரேஷ்குமார். பின்பு ஒருநாள் வாட்சப் சேட்டிங்கில் பேசும்போது, படத்தின் வளர்ச்சியை பற்றி சுரேஷ்குமார் கேட்க, அந்த நடிகை தேர்வு தான் பெரும் தலைவலியாக உள்ளது. திருவனந்தபுரத்து பெண் ஒருத்தி எனது மைண்டில் உள்ளார், ஆனால் அவளது தந்தையை தான் என்னால் சமாதானம் செய்ய முடியவில்லை என கூறினார், ப்ரியதர்ஷன்.

எதுவும் தெரியாமல் அப்பாவியாக, திருவனந்தபுரத்திலா… எனக்கு பெரும்பாலான நபர்களை அந்த ஊரில் தெரியும், நான் சமாதானம் படுத்தவா? என சுரேஷ்குமார் கேட்க, அந்த நபரே நீங்கள் தான் சுரேஷ்குமார் என ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.

நண்பரின் இந்த செயலால் மனம் இறங்கிவந்த சுரேஷ்குமார், கீர்த்தி சுரேஷை சினிமாவில் நடிக்க அனுமதித்துள்ளார். இன்று கீர்த்தி சுரேஷ் மகாநதி படத்திற்காக தேசிய விருதை தட்டி சென்றுள்ளார்.