26 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோஹ்லி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் 2வது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி சாதனை படைக்க உள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, கயானாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ஓட்டங்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியாண்டட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார்.

ஜாவித் மியாண்டட் 1,930 ஓட்டங்கள் குவித்துள்ள நிலையில், கோஹ்லி 1,912 ஓட்டங்கள் குவித்துள்ளார்.