சின்னத்திரையில் பல தொலைக்காட்சி சேனல்கள் எதையாவது செய்து மக்களை தன் பக்கம் இழுக்க முயன்று கொண்டு இருக்கையில், புதிதாக தோன்றிய உடனேயே அனைவரது கவனத்தியும் இழுத்த சானல் தான் கலர்ஸ் தமிழ்.
இதில் ஒளிபரப்பப்பட்ட எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபல நடிகர் ஆர்யா, தனது திருமணத்திற்கு பெண் தேடினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டது என்னவோ பொழுதுபோக்கிற்காக தான்.
இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பதினாறு போட்டியாளர்களும், அவரை திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆசை கொண்டனர். அதில் முக்கியமானவர் அபர்நதி. அவர் ஆர்யாவை மிகவும் உருகி, உருகி காதல் செய்தார்.
தற்போது அவர் வெள்ளித்திரையில் நடிகர் ஜீவி பிரகாஷ் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இந்நிலையில், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு விதமான கமெண்ட்களை பெற்றுவருகிறது. மேலும், ஒரு சிலர் இதுபோன்று புகைப்படங்கள் வெளியிட வேண்டாம் என அதிரடியாக அவரது பதிவிலேயே கூறி இருப்பது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Instagram இல் இந்த இடுகையை காட்டு