உடல் எடையை குறைக்கும் நோக்கில் மேகன் மாத்திரைகளை பயன்படுத்துவதாக போலி விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும் என பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசி மேகன் சிகிச்சை பெறுவதற்கு முன், சிகிச்சை பெற்றதற்கு பின் என இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு, அவர் உடல் எடையை குறைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
அதேபோல மற்றொரு நிறுவனம், கர்ப்பத்திற்கு பிறகு என்னுடைய உடல் எடையை இழந்துவிட்டேன். ஆனால், கெட்டோ உடல் எடைக்கான மாத்திரையை பயன்படுத்தியதால் பழைய நிலைக்கு திரும்பிவிட்டேன் என மேகன் கூறியதாக விளம்பரம் செய்துள்ளது.
மற்றொரு மூர்க்கத்தனமான விளம்பரத்தில், அதிக எடையினால் மேகன் கோபமடைந்து, அதற்காக மாத்திரைகளை பயன்படுத்தினார் என கூறியுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்று உடல் எடையினை குறைப்பதில் ராணி எலிசபெத்தின் கட்டளைகளை மீறி மேகன் செயல்பட்டதால், அவருக்கும் ராணிக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மேகன் சிக்கலில் உள்ளதாகவும் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அரண்மனை நிர்வாகம், மேகன் மற்றும் அரண்மனை குறித்து போலியான செய்திகளை வெளியிட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.