மோடியிடம் இருந்து கோத்தபாயவிற்கு எதிர்பாராத முடிவு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன எனத் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இன்றைய மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோத்தபாய ராஜபக்ச இன்று அறிவிக்கப்படவுள்ளார்.

இதற்கு முன்னதாக, இந்தியாவுக்குச் சென்று அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு கோத்தபாய முயற்சித்தார்.

அதற்காக நேரம் ஒதுக்குமாறும் கோத்தபாய கோரியிருந்தார். இருப்பினும், இந்தியப் பிரதமர் மோடி, கோத்தபாயவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று தெரியவருகின்றது.