ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமித்தமை மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவராகும். கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது.
கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது, வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஊடகவியலாளர்கள் வீதி முழுவதும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
நான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், எனது பாதுகாப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள்.
நான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு கதை பரவி வருகின்றது. நான் ஒரு போதும் அந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கமாட்டேன்.
கொலைக்கார கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது. அவர்கள் ஆட்சிக்கு வருவதென்பது மிகப்பெரிய ஆபத்தாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.