பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…. வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்த கரடி..!!

அமெரிக்காவில் கரடி ஒன்று வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, அங்கிருந்த சுவற்றில் துளையிட்டு அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டிலிருந்த பொருள் ஒன்றின் வாசனை கரடியை கவர்ந்து இழுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின்போது அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், இதுபோன்று கடந்த மாதம் மோன்டனா நகரில் கரடி ஒன்று வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களையெல்லாம் சேதம் செய்து விட்டு தூங்கத் தொடங்கியது. பின்னர் மயக்க மருந்தைக் கொடுத்து வனத்துறையினர் கரடியை மீட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.