இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் யுவதியின் தலையை துண்டித்து கொலை செய்த 24 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
துண்டித்த தலையுடன் தெருவில் நடந்து செல்லும் இளைஞரின் நடுங்கவைக்கும் காட்சிகள் கண்காணிப்பு கமெராவில் பதிவான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 2.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின்போது ஐதராபத் நகரின் ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள மனைவியின் குடியிருப்புக்கு சென்றுள்ளார் பிரதீப் குமார்.
தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் மனைவியை கடுமையாக தாக்கி, வாளால் மனைவியின் தலையை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து அருகாமையில் உள்ள ஓடையில் தலையை வீசி எறிந்துள்ளார். துண்டித்த தலையுடன் தெருவில் பிரதீப் நடந்து செல்லும் காட்சிகளே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
ரத்தக்கறையுடன் பாலம் ஒன்றின் அருகாமையில் நின்றிருந்த பிரதீப், ரோந்து பொலிசார் வாகனத்தை கண்டதும் தப்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால் பொலிசார் அவரை விரட்டிப்பிடித்துள்ளனர். பின்னர் ஓடையில் வீசி எறிந்த தலையையும் வாளையும் மீட்கும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இருவரும் பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது.