தனியார் விடுதியில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தனியார் விடுதி ஒன்றில் இருந்து தற்கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் தேக்கடி பகுதியில் ஞாயிறன்று மாலை தனியார் விடுதி ஒன்றில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது.

மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் தாயாரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரமோத் பிரகாஷ் எனவும்,

இரு பெண்களில் ஒருவர் அவரது மனைவி ஜீவா எனவும் இன்னொருவர் அவரது தாயார் சோபனா எனவும் தெரியவந்துள்ளது.

இவர்களே தேக்கடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மர்மமான நிலையில் சடலமாக மீட்கபட்டனர்.

கடந்த மூன்று மாதமாக இவர்கள் மூவரும் அதே விடுதியில் இரண்டு அறைகளை பதிவு செய்து தங்கி வந்துள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் வீடு மற்றும் சொத்து வாங்குவது தொடர்பாக முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரமோத் மற்றும் ஜீவாவின் இரண்டாவது திருமணம் இதுவென கூறப்படுகிறது. ஜீவா தமிழகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையேயான பொருளாதார பிரச்னைகளே தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஞாயிறன்று மாலை வரை இரு அறைகளும் திறக்கப்படாத நிலையில், விடுதி ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர்.

தட்டியும் கதவு திறக்காத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது பிரமோத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கே பிரமோத் மட்டுமின்றி அவரது தாயாரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பாட்டார். மேலும் மனைவி ஜீவா படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார்.

மனைவியை கொலை செய்த பின்னர் தாயாரும் மகனும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே பிரமோத்தின் பேஸ்புக் பக்கத்தில் அவரது பதிவுகள் தற்போது விசாரணையை இறுக்கமடைய செய்துள்ளது.

பெண்களை திட்டமிட்டு ஏமாற்றுபவர் எனவும் தாம் ஒரு ஏமாற்றுப் பேர்வழி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது பொலிசார் விசாரனைக்கு உட்படுத்தியுள்ளனர்.