தோனியின் திறமையை பளிச் என சொல்லும் உலக அளவிலான அபூர்வ சாதனை!

நேற்று முன் தினம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ஒருநாள் போட்டியின் 42 வது சதத்தை அடித்தார். இந்த சதம் அவர் ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி அடித்த 35ஆவது சதமாகும்.

இது வரை இந்த மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் சார்பில் மொத்தம் 70 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதில் 35 சதங்களை இதுவரை 3 ஆவது வீரராக களமிறங்கிய அனைத்து வீரர்களும் அடிக்க, அடுத்த 35 சதங்களை விராட் கோலியும் அடித்துள்ளார். இந்த நிலையில் 1 முதல் 7 ஆம் இடம் வரை, ஒவ்வொரு இடத்திலும் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி இருப்பது ஆச்சரியமான ஒரு சாதனையாக இருக்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக அதிக சதம் அடித்தவர் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 45 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒட்டுமொத்தமாக 49 சதங்களை அடித்து இருக்கும் நிலையில் 45 சதங்களை தொடக்க ஆட்டக்காரராகவே அவர் எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் இந்தியனின் தற்போதைய கேப்டன் விராட் கோலி 35 சதங்களுடனும், நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ரோஸ் டைலர் 18 சதங்களுடனும், ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி 7 சதங்களுடன் இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கும் இருக்கிறார்கள்.

ஆறாவது இடத்தில் தற்போது இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஜோஸ் பட்லர் நான்கு சதங்களையும், ஆச்சர்யப்பட வைக்கும் விதமாக ஏழாவது இடத்தில் களம் இறங்கியுள்ள இந்திய அணியின் மூத்த வீரர், முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி அங்கு இரண்டு சதங்களை அடித்து ஏழாவது இடத்தில் களம் இறங்கி அதிக சதம் அடித்தவர் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

ஒன்று முதல் ஏழு இடங்களில் 5 இடங்களுக்கான பட்டியலில் இந்தியர்கள் இடம் பெற்றது ஆச்சரியமான சாதனையாகவும், நான்கு மற்றும் ஆறாவது இடங்களை ரோஸ் டைலர், ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார்கள். இதில் ஏழாவது இடத்தில் களமிறங்கி சதம் அடிப்பது ஒருநாள் போட்டிகளில் அபூர்வமான நிகழ்வு ஆகும். அதனை இந்தியாவின் மகேந்திர சிங் தோனி இரண்டு முறை செய்திருப்பது இந்திய அணிக்காக இறுதி நேரத்தில் களமிறங்கி அவர் பொறுப்புடன் விளையாடியதை காட்டுகிறது. அதனால்தான் என்னவோ உலகின் பெஸ்ட் மேட்ச் பினிஷர் என்று அழைக்கப்படுகிறாரோ!

இந்திய அணியின் சார்பில் இடம்பிடித்துள்ள நான்கு பேரும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒன்றாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.