பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற உடன் தனது வேலையை ஆரம்பித்த வனிதா.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை வனிதா எலிமினேஷன் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 3-யில் எலிமினேஷன் செய்யப்பட்ட இரண்டாவது நபர் வனிதா, இவர் எலிமினேஷன் செய்தது பலருக்கு உண்மையில் சந்தோஷத்தை தான் கொடுத்தது. அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வனிதா இருந்தது தான்.

இந்நிலையில், வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆகுமாறு ப்ரோமோ இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேளதாளம் முழங்க புடவை அணிந்துள்ள வனிதா நடனமாடியவாது உள்ளே செல்கிறார். வனிதாவின் எண்ட்ரீக்கு காரணம் என்ன என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

வனிதா உள்ளே சென்றவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். போட்டியாளர்கள் மத்தியில் அமர்ந்து கோபமாக பேசி கொண்டுமிருக்கும் புரோமோவை, பிக்பாஸ் படக்குழு வெளியிட்டுள்ளது. புரோமோவில் தர்ஷன் மற்றும் கவினை வறுத்தெடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.