ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும், அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து நடிகர் விஜய் சேதுபதியை கருத்து தெரிவித்துள்ளார். அதில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து தெரிவித்திருந்தார்.
அடுத்த வீட்டுப் பிரச்சனையில் மற்றொருவர் தலையிடமுடியாது. தலையிடக்கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம், ஆளுமை செலுத்த கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது என்று பெரியார் பழமையை வைத்து விஜய் சேதுபதி கருத்து கூறினார்.
அதற்கு பதிலளித்த தமிழிசை காஷ்மீர் பற்றிய சில தவறான கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சினை பற்றி என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.
பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறக்கூடாது. அவர்களில் சினிமாவில் மட்டும் படிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சனையை இந்தியா செய்த நடவடிக்கைகள் பல கோடிப்பேர் வரவேற்று வருகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.