திருமணமானவருடன் உடல் ரீதியான தொடர்பு! நடந்தது என்ன? ஆண்ட்ரியா

ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் மற்றும் தரமணி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. மேலும், இவர் சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஆண்ட்ரியா விஸ்வரூபம் இரண்டு மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதற்கு பின் ஆண்ட்ரியா எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். ஆயுர்வேத சிகிச்சை கடந்த சில மாதங்களாக எடுத்து வருகிறார். இதன் காரணமாக சில மாதங்களாக நடிப்பில் இருந்து விலகி இருக்கின்றார். ஆனால் மாதக்கணக்காக ஆண்ட்ரியா ஆயுர்வேத சிகிச்சை எடுக்கின்ற அளவு அவருக்கு என்ன தான் சோகம் என அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, அவர் முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சில சோகமான கவிதைகளை வாசித்து இருக்கின்றார். இந்த கவிதைகள் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாய் பார்வையாளர்களுக்கு தோன்றியுள்ளது.

இதனால் ரசிகர்கள் அவரது சோகத்தினை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். இதுக்குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பவே, ” நான் திருமணம் ஆன ஒருவருடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். என்னை அவர் மனதளவில் காயப்படுத்தியுள்ளார்.

அந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் நான் திணறி கொண்டு இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன். ஆயுர்வேத சிகிச்சைக்கும் இது தான் காராம் என்று ஆண்ட்ரியா கூறினார்.

இந்நிலையில், ஆண்ட்ரியாவுடன் தொடர்பில் இருந்த அந்த நபர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ரசிகர்கள் ஆண்ட்ரியாவிடமே இதுகுறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா தனது கவிதை புத்தகமான ப்ரோக்கன் விங் புத்தகத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் தைரியமாக எழுதியிருக்கிறேன் என கூறியுள்ளார்.