விபத்தில் சிக்கிய நபர் ஒருவரை அமைச்சர் பாலித தேவப்பெரும தமது வாகனத்தை அனுப்பி மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றியுள்ளார்.மொன்றாகல மத்துகம மக்கள் குடியிருப்பு நடமாட்டம் குறைந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் டிப்பர் வண்டியுடன் மோதி விபத்து, ஏற்பட்டுள்ளது.
இந்தவிபத்தில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலத்த காயத்துடன் குருதிப்பெருக்குடன் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில் இதனையறிந்த அமைச்சர் பாலித பெரும தமது பெறுமதியான அமைச்சு வாகனத்தில் குறித்த நபரை ஏற்றிச்சென்று புத்தள வைத்தியசாலையில் அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.இந்த நிலையில் அமைச்சர் பாலித தேவப்பெருமவின் செயல் அப்பகுதி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.பொதுப் பணத்தையும் பொதுச்சொத்துகளை,பயன்படுத்தும் அமைச்சர்களும் பிற பாராளமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.
ஆனால், இந்த பொதுச் சொத்துக்கள் பொதுமக்களுக்காகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பம் இப்படியான ஒருசெயற்பாடான நோய்வாய்ப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் தவரப்பெரும தனது அதிகாரப்பூர்வ வாகனத்தை வழங்கிய தருணத்தை பாராட்டுகின்றோம் என பலரும் அமைச்சரை புகழ்ந்துள்ளனர்.
இதேவேளை அமைச்சர் பாலித தேவப்பெரும இரத்தினபுரியிலும் இவன்னியிலும் மக்கள் வெள்ளத்தில் பாதிகபப்ட்டிருந்தபோது, நேரடியாக மக்களின் குடியிருப்புகளின் சென்று பலரை காப்பாற்றி மீட்பு நிவாரண பணியில் ஈடுபட்டவர்.அத்துடன் இலங்கை வரலாற்றின் அரசியலில் மக்களின் செயல்வீரன் எனவும், ஏழைகைளின் தோழன் என்றும், அனைத்து இன மக்களின் பாசத்திற்குரிய அரசியல்வாதியாகவும் அமைச்சர் பாலித தேவப்பெரும சமூகத்தில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.