வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தி, இரண்டு பயணிகளிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, அவர்களிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வரும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 8.00 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.
அப்போது அந்த விமானத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சோர்ந்த கமரூதீன் (27), அவருடைய உறவுப்பெண் ரகீலா (23) ஆகிய 2 பேர் வந்தனர்.
அப்போது விமானநிலையத்தில் இருந்த விமான அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களோ, நாங்கள் உள் நாட்டு பயணிகள் எங்களை ஏன் விசாரிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
நீங்கள் சர்வதேச விமானத்தில் வருகிறீர்கள் சந்தேகப்பட்டால் உங்களை சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று இருவரிடம் சோதனை செய்ய, அப்போது, ரகீலாவின் கைப்பையில் தங்க செயின்கள் மோதிரங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதோடு கமருதீன் உள் ஆடைக்குள் கனமான இரண்டு செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இருவரிடம் இருந்து 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் 34 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்ததுடன். சர்ஜாவில் இருந்து நகைகளை கடத்தி வந்தவரை தேடிவருகின்றனர்.