இலங்கை புத்த திருவிழாவில் நடக்கும் கொடுமைகள்.. சிக்கியது ஆதாரம்!

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புத்த சமய திருவிழாவான பெரஹர விழாவில் நடக்கும் கொடுமைகளை தாய்லாந்தின் தொண்டு நிறுவனம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தாய்லாந்தின் யானைகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவன அறக்கட்டளை, கண்டியில் நடைபெற்று வரும் பெரஹர விழாவில் பங்கேற்கும் 70 வயதான டிக்கரி என்ற பெண் யானையின் திகிலூட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.

அந்த படத்தில், எலும்பும் தோலுமாக மிக மோசமான நிலையில் இருக்கும் டிக்கரி யானையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சமூகவலைதளத்தில் குறித்த புகைப்படத்தை பகிர்ந்த தாய்லாந்தின் தொண்டு நிறுவனம், டிக்கிரி வயதான நோய்வாய்ப்பட்ட பெண் யானை, ஒவ்வொரு இரவும் சங்கிலியால் கட்டப்பட்டு, பெரஹர விழா அணிவகுப்பில் பங்கேற்று, அதன் உரிமையாளர்களால் சித்திரவதை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் பெரஹர திருவிழாவின் அணிவகுப்பில் பணியாற்ற வேண்டிய 60 யானைகளில் டிக்கரியும் ஒன்று. தினமும் மாலை அணிவகுப்பில் பங்கேற்கும் டிக்கிரி, நள்ளிரவு வரை தொடர்ச்சியாக பத்து இரவுகளில், சத்தம், பட்டாசு மற்றும் புகை ஆகியவற்றின் மத்தியில் கொடுமைப்படுத்த படுகிறது.

ஒவ்வொரு இரவும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் டிக்கரி, விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களை வலுகட்டாயமாக ஆசீர்வாதம் செய்ய வைக்கப்படுகிறது. டிக்கரியுடைய உடையின் காரணமாக, அவளுடைய எலும்பு உடலையோ அல்லது அவளது பலவீனமான நிலையையோ யாரும் பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுத வேண்டும் என இலங்கை மக்களை தாய்லாந்து தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், கோயிலின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது. நாங்கள் எப்போதும் விலங்குகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளோம், டிக்கிரியை யானை மருத்துவர் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.