சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. பிரபலம் அதிர்ச்சி புகார்!

நடிகர் ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட படம் 2.0. உகலகம் முழுவதும் 600 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த படம் விரைவில் சீனாவில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சப்டைட்டில் எழுதுவதில் பணியாற்றிய ரேக்ஸ் என்பவர் ட்விட்டரில் தனக்கு சம்பளம் தரப்படவில்லை என அதிர்ச்சி புகார் கூறியுள்ளார். லைகா நிறுவனத்தையும் அந்த ட்விட்டில் டேக் செய்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனமும் எந்திரன் படத்திற்காக இன்னும் சம்பளம் தரவில்லை என அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.