நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு மனைவி லதாவுடன் காஞ்சிபுரத்துக்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்ததால் அந்த பகுதியே பரபரப்பானது.

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் தரிசனம் இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்தப்பட உள்ளது.

அத்திவரதர் கோவில் தற்போது இந்தியா முழுக்க பிரபலம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அத்திவரதர் எழுந்தருளுவார் என்பதால், நாடு முழுக்க தற்போது பிரபலமாகி உள்ளது இந்த கோவில்.

சாமியை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள்.

இதையடுத்து காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு தரிசனம் செய்தார். அவரின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்.

ரஜினியும், லதா ரஜினிகாந்தும் சேர்ந்து சிறப்பு பூஜை செய்தனர். நேற்று இரவு சுமார் 20 நிமிடம் அவர் கோவிலில் தரிசனம் நடத்தினார்.

ரஜினி கோவிலுக்கு வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடினர், அவர் காரிலிருந்து இறங்கி நடந்து போன போது தலைவா என கத்தி கூச்சலிட்டனர்.

இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளது.