காதலி செய்த செயல்… இறுதியில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் காதலனின் உண்மை முகத்தை அறிய சமூகவலைத்தளத்தில் போலி அக்கவுண்ட் புதிதாக உருவாக்கிய நிலையில், அவர் அதைப் பற்றி வெளியிட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவின் Ghana-வின் Accra பகுதியில் செவிலியராக வேலை செய்து வருபவர் Akosuah May. இவருக்கு தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகமடைந்துள்ளார்.

இதனால் காதலனின் உண்மை முகத்தை அறிய வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தள பக்கமான டுவிட்டர் பக்கத்தில், போலி அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அதன் பின் அதில் தன்னுடைய காதலனிடம், வேறொரு பெண் போன்று தொடர்ந்து பேசி வந்துள்ளார். அப்போது காதலன், என்னுடைய காதலி இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

இதை சற்று எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்து, அதை அப்படியே நான் என் காதலனின் உண்மை முகத்தை அறிவதற்காக இப்படி செய்தேன், ஆனால் அவனோ என் காதலி இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இறந்துவிட்டான் என்று கூறியதாக, அதை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த டுவிட் சமூகவலைத்தளங்களில் 156,000 லைக்குகளையும் 29,000 ரீடுவிட்களையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இதில் பெரும்பாலான இணையவாசிகள், இதில் உங்கள் மீது தான் தவறு, நீங்கள் அவரின் உண்மை தன்மையை அறிய இப்படி போலித்தனம் செய்ய வேண்டிய அவசியமில்லை, வேறு மாதிரி எதாவது செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.