மகாராஷ்டிரா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினர் நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும்.
கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்களின் உடமைகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. சாலைகள் ஆறுகளாக மாறி உள்ளது. பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் அரசு அமைத்த தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்
கடந்த 30 ஆண்டுகளில் காணாத மழையை மகாராஷ்டிரா மாநிலம் கண்டுள்ளது என்றே கூறலாம். இந்த மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே அமைந்துள்ள கொய்னா அணை 890 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 100 டி.எம்.சி கொள்ளளவும் உடையது. அந்த அணை பாதிக்கும் மேல நிரம்பி வருகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் தாராளமாக நிதி வழங்கும்படி மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதை தொடர்ந்து விருப்பம் உள்ளவர்கள் நிதி அளித்து வருகிறார்கள் மேலும் நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ரூ.25 லட்சம் நன்கொடையாக அளித்தனர். அவர்கள் காசோலை வழங்கும் புகைப்படத்தை முதல்-மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
அதில், “மராட்டிய மாநில வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய ஜெனிலியா தேஷ்முக்குக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது போன்று பல நடிகர்-நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.