“உயர்தரப் பரீட்சையின்போது நேர்ந்த அசம்பாவிதத்தால் பதறியடித்து ஓடிய மாணவர்கள்!”

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் பதற்றமடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஆணமடுவ – கண்ணங்கர முன்னோடி வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

பரீட்சை மண்டபத்திற்குள் சாரைப்பாம்பு ஒன்று திடீரென நேற்று புகுந்த காரணத்தினால் சொற்ப நேரத்திற்கு பரீட்சையை இடைநிறுத்த நேரிட்டுள்ளது. பரீட்சை மண்டபத்திற்குள் புகுந்த பாம்பும் குழப்பமடைந்து அங்கும் இங்கும் அலைமோத தொடங்கியதனால் மாணவ, மாணவியர் குழப்பமடைந்து கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பரீட்சையை நிறுத்திவிட்டு மாணவ, மாணவியரை சற்று நேரத்திற்கு மண்டபத்தை விட்டு வெளியேற்றிய, பரீட்சை மண்டப பொறுப்பாளர் பாம்பை துரத்திவிட்டு பின் மீண்டும் பரீட்சையை நடத்தியுள்ளார். அத்துடன் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு மேலதிக நேரமும் வழங்கப்பட்டுள்ளது.