புத்தளம் பொலிஸ் பிரதேசத்தில் பிரபு வாகனம் மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது பிரபு வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பென்ஸ் வாகனத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி பின்னர் டிபென்டர் வாகனத்தில் மோதுண்டுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கு காரணமாக இருந்த பிரபு வாகனத்தில் இலக்கத்தகடு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த வாகனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலக்கத் தகடு இல்லாத வாகனத்தில் சத்துரிக்கா ஏன் பயணித்தார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.