நிர்வாணமாக போஸ்கொடுத்த இங்கிலாந்து பெண் வீரர்…

இங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெயலர் பிரபல இதழ் ஒன்றிற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரான சாரா டெய்லர் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர். பல பெண்களுக்கு எடுத்துகாட்டாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் Women’s Health என்ற இதழ் பெண்களுக்கான விழிப்புணர்வை பரப்பி வருகிறது. அதாவது பெண்கள் தங்களை உடல் அளவிலும், மன அழுவிலும் எப்படி இருக்க வேண்டும், கவலையிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பது தான், குறித்த இதழுக்கு சாரா டெய்லர் ஆடையில்லாமல் நிர்வாணமாக, கையில் கிளவுஸ் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

அதில், நான் இதில் பெருமையடைகிறேன், இந்த பிரச்சனைகாக என்னையும் ஒரு பகுதியாக அழைத்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.