விமானத்தில் ஆரோக்கியமாக ஏறிய பணிப்பெண்… திடீர் மரணம்!

பெண் விமான ஊழியர் ஒருவர் தட்டம்மை நோய் காரணமாக கோமாநிலைக்கு சென்று, அதன் பின் கடுமையான பாதிப்பினால் பரிதாபாமாக இறந்துள்ளார்.

srael’s El Al airline நிறுவனத்தில் Rotem Amitai என்ற 43 வயது பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் திகதி விமானப்பணி பெண்ணாக JFK விமானநிலையத்திலிருந்து இஸ்ரேலின் Tel Aviv-விக்கு பயணித்துள்ளார்.

அதன் பின் சில நாட்களில், அதாவது 31-ஆம் திகதி திடீரென்று இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, இதைத் தொடர்ந்து சில வாரங்களில் அவர் கோமாநிலைக்கு சென்றார்.

மருத்துவர்கள் அவரை தொடர்ந்து நடத்திய சோதனையில், அவர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்துள்ளனர், அதன் பின் நோயின்(Encephalitis) தாக்கம் அதிகமானதால், பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு இந்த நோய் விமானத்தில் இருந்து தான் அவருக்கு வந்ததா? அல்லது வேறெங்கும் வந்ததா என்பதை உறுதிபடுத்தவில்லை என்று நாட்டின் சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நன்றாக, ஆரோக்கியமாக இருந்த Rotem Amitai திடீரென்று இப்படி உயிரிழந்தது, அவருடைய குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்பட்டுள்ளது.

மேலும் Rotem Amitai தன்னுடைய ஆரம்ப காலத்தில் தட்டம்மைக்கான ஊசி போட்டுள்ளார். ஆனால் அவர் ஒரு முறை தான் போட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.