மனைவியை ஏமாற்றும் கணவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுக்கும் பெண்.. எப்படி தெரியுமா? அதிரவைக்கும் தகவல்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் டிண்டர் ஆப் மூலம் ஏமாற்றும் கணவர்களை கையும் களவுமாக பெண் ஒருவர் பிடித்து வருவதால், அவரை பெண்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்தவர் Erin Colleen. 34 வயதான இவரை டிண்டர் ஆப் மூலம் ஆண்கள் பலர் ஜாலியாக இருந்துவிட்டு, ஏமாற்றியுள்ளனர்.

இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கும், இவர் தன்னைப் போன்று பெண்கள் வேறு யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக, அதே டிண்டர் ஆப்பில் திருமணமான ஆண்களை குறித்து, அவர்களைப் பற்றிய தகவல்களை மனைவிகளுக்கு அனுப்பி அவர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Erin Colleen அங்கிருக்கும் அலுவலகம் ஒன்றில் Datamining-ல் வேலை செய்து வருகிறார். அதன் மூலம் அவர்களின் மனைவிகள் எங்கிருக்கின்றனர் என்பதை டிராக் செய்து, அவர்களுக்கு அந்த புகைப்படங்கள், சேட் செய்வது போன்றவற்றை அனுப்பி வந்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தான் ஏமாந்தது போன்று திருமணமான பெண்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக Erin Colleen டிண்டர் ஆப்பில் தனக்கு என்று ஒரு அக்கவுண்ட் பதிவேற்றியுள்ளார்.

அந்த டிண்டர் ஆப்பில் திருமணமான ஆண்கள் ஒரு சிலர், எனக்கு திருமணமாகிவிட்டது என்று குறிப்பிட்டிருப்பர். ஒரு சிலர் இந்த விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பர்.

அப்படி இதுவரை 5 ஆண்களிடம் பேசியுள்ள Erin Colleen அவர்களின் மனைவிகளுக்கு கணவர் எப்படியெல்லாம் பேசுகின்றனர் என்ற தகவலை அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அந்த பெண்களில் சிலர் உங்களின் இந்த உதவி மிகவும் தேவையாது, உங்களைப் போன்று பலர் இந்த உலகில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து Erin Colleen கூறுகையில், நான் ஏமாற்றுபவர்கள் பக்கத்தில் நிற்கமாட்டேன், நான் பல முறை ஏமாற்றப்பட்டுள்ளேன், இதனால் ஒரு கட்டத்தில் நிலகுலைந்து நின்றிருக்கிறேன், ஆனால் அப்போது எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

இதனால் தன்னை போன்று வேறு பெண் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக டிண்டர் ஆப்பி, திருமணமான ஆண்கள் மற்றும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் ஆண்களிடம் நண்பராக அறிமுகமாகி, அதன் பின் அதை அவர்களின் மனைவிக்கு அனுப்ப்புவேன், ஏதோ என்னால் மற்ற பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போன்று கூறியுள்ளார்.