திருமலை திருப்பதியில் இயற்கை மிகுந்த நகரம். 6 மலைகளை கடந்து 7-வது மலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாசலபதியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் திருமலை மாசுபடுவதுடன், சேஷாசலம் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன இதனால் இயற்கையை சீரழிக்கிறது.
ஏழுமைலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அங்கு கடைகள் நடத்தும் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். மேலும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. அதற்கான உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள், வியாபாரிகள், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களிடமும், திருமலையில் அதிக பக்தர்கள் கூடும் இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்வது இனி இருக்காது. மேலும் பக்தர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக திருமலை முழுவதும் பல்வேறு இடங்களில் தேவஸ்தான ஜலப்பிரதசானி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. அதில் பக்தர்கள் குடிநீர் குடிக்கலாம். அந்த குடிநீரை வீணாக்க கூடாது. பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை திருமலைக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.