இந்தியாவுக்கு மிரட்டல்.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!

காஷ்மீரில் எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ராம் கான் எச்சரித்துள்ளார்.

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை சமீபத்தில் இந்தியா நீக்கியதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் உறவு நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருகிறது. இனி இந்தியாவுடன் எந்த உறவும் இல்லை என பாகிஸ்தான் வெளிப்படையாக அறிவித்தது.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தானின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் உள்ள சட்டமன்றத்தில் இம்ரான் கான் சிறப்புரையாற்றினார்.

சர்ச்சைக்குரிய காஷ்மீரில் இந்தியாவின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை எச்சரித்துள்ளார். மேலும், டெல்லிக்கு ஒரு பாடம் கற்பிக்க நேரம் வந்துவிட்டது என்றும் இம்ரான் காம் சபதம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீரில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து உறுதியான தகவல்கள் வந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அனைத்திற்கும் தயாராக இருக்கிறார்கள், தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பாக்கிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் பேட்டியளித்த போது இம்ரான் கான் கூறினார்.

இந்தியா எந்த விதமான மீறல்களில் ஈடுபட்டால், இறுதிவரை போராடுவோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காம் கூறினார்.

இந்நிலையில், இன்று ஆகத்து 15 இந்திய சுதந்திர தினத்தன்று ட்விட்டரில் இம்ரான் கான் கூறியதாவது, இந்தியா நிர்வாகிக்கும் காஷ்மீரில் 12 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே பெரிதும் ராணுவமயமாக்கப்பட்ட பிரதேசத்தில் கூடுதல் படைகள் இருப்பது, ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை அனுப்புதல், முழுமையான தகவல் தொடர்பு துண்டிப்பு என மோடியின் முந்தைய குஜராத் முஸ்லிம்களை இன அழிப்பு உதாரணமாக கொண்டு இந்தியா நடவடிக்கை மேற்கொள்கிறது.

மற்றொரு ஸ்ரேப்ரினிகா வகை படுகொலை மற்றும் இந்தியா நிர்வாகிக்கும் காஷ்மீரில் முஸ்லிம் இனம் அழிக்கப்படுவதை உலகம் அமைதியாக கண்டுகொண்டிருக்கிறது? இது நடக்க அனுமதித்தால் சர்வதேச சமூகத்தை நான் எச்சரிக்க விரும்புகிறேன், இது முஸ்லீம் உலகில் கடுமையான விளைவுகளை மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தும், இது தீவிரமயமாக்கல் மற்றும் தொடர் வன்முறைகள் ஏற்பட வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.