வனிதாவை கன்னத்தில் பளாரென கொடுத்த முகென்.!

வனிதா அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அபிராமி -முகென் காதல் விவகாரத்தை கையிலெடுத்து இருவருக்குள்ளும் வனிதா, பல பிரச்னைகளை மூட்டிவிட்டு முயன்று அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.

அதன்பின்னர் தனக்கு ஆதரவாக மதுமிதாவை இழுத்து கொண்ட வனிதா அவரை வைத்து ஆட்டம் போட துவங்கி ஆண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி பிரச்சனையை பெரிது படுத்தினார். இது எதையும் அறியாத மதுமிதாவுக்கு செவ்வனே சொம்படிக்க துவங்கினார்.

இப்படிப்பட்ட சூழலில் வனிதாவின் இந்த செயல்களை கண்டா முகேன் மிகவும் ஆத்திரமாக காணப்படுகின்றார். எனவே வனிதாவை முகென் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக முகெனை பிக்பாஸ் குழுவினர் வெளியில் அனுப்பி விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும், வனிதாவும் இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையா என்பது போக போக தான் புரியும். பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்.