காதலனுக்காக அம்மாவையே… 25 மகள் செய்த அதிர்ச்சி செயல்!

தாய்லாந்தில் சொத்திற்காகவும், காதலனுக்காகவும் அம்மாவை மகளே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பேங்காங்கின் BuengKum மாவட்டத்தைச் சேர்ந்தவர் Kanchana Srisung(25). இவருக்கும் Ueamduean என்ற 55 வயதில் தாய் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 22-ஆம் திகதி இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதால், அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் கோமா நிலைக்கு, சென்ற இவர் ஒரு மாதத்திற்கு பிற மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பது குறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தை செய்ததே அவரின் மகள் Kanchana Srisung என்பது தெரியவந்துள்ளது.

அவரிடம் பொலிசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து இவருடைய காதலன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இதனால் அவரை பெயிலில் எடுக்க வேண்டுமென்றால், அதிகம் பணம் தேவைப்படுகிறது. என் அம்மாவை கொலை செய்துவிட்டால், அவருக்கு இருக்கும் மூன்று பாலிசியிலிருந்து வரும் பணத்தை எடுத்து காதலனை பெயிலில் எடுத்துவிடுடலாம், என்பதால் என்னுடைய சிலரை கூட்டாளியாக சேர்த்து அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Kanchana Srisung-வின் தாய்க்கு 10 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது. இது முதல் முறையில்லை எனவும், இதற்கு முன்பு Kanchana Srisung அவருடைய தாயை கொலை செய்ய முயற்சித்ததாக், அவருடைய பாட்டி அதிர்ச்சி தகவலை கூறினார்.

பணத்திற்காக, அவள் இதற்கு முன்பு என் மகளை கொல்ல நினைத்தாள், ஆனால் அதில் என் மகள் தப்பிவிட்டாள், இப்போது மீண்டும் இந்த செயலை செய்துள்ளாள்.

இதைப் பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை என்று அவரிடம் கேட்ட போது, மகள் என்பதால், அவள் மன்னித்துவிட்டாள், இப்போது மீண்டும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், அவளை பார்க்க கூட விரும்பவில்லை என்று என்னுடைய மகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இவரை கொலை செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது அவருடைய காதலனாகத் தான் இருக்கும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.