எங்களுக்கு மோதிரம் கிடையாதா? இளைய தளபதி விஜய்யிடம் கேட்கும் பிரபல நடிகர்

இளைய தளபதி விஜய் அண்மையில் பிரம்மாண்டமாக தயாராகும் தனது பிகில் பட படப்பிடிப்பை முடித்துள்ளார். அந்த தினத்தில் படத்திற்காக பணிபுரிந்த 400 பேருக்கும் அன்பு பரிசாக மோதிரத்தை பரிசளித்துள்ளார்.

அந்த செய்திகளும், மோதிரங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்போது பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன், விஜய் சார் எங்களுக்கு எல்லாம் மோதிரம் கிடையாதா என்று கேட்டுள்ளார்.

நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு பிகில் குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.