பயணிகள் விமானத்தில் சந்தித்த மோசமான அனுபவங்களை பற்றி பெண் விமான ஊழியர் தெரிவித்திருப்பது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே விமானத்தில் வேலை பார்ப்பது என்பது சாதரண விஷயமல்ல என்று கூறுவர். அந்த வகையில் தற்போது அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் Quora-வில் இணையவாசி ஒருவர் விமானத்தில் விமான ஊழியர் யாராவது தாங்கள் சந்தித்த மிகவும் மோசமான அனுபவம் எதாவது இருக்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு Nuralia Mazlan என்ற பெண் ஒருவர், தான் பெண் விமான ஊழியராக இருந்த போது, ஒரு மோசமான அனுபவத்தை பார்த்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், தான் Air Asia flight நிறுவனத்தில் பெண் விமான ஊழியராக இருந்தேன், அப்போது அந்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணித்தார். அப்போது அவர் தன் சக பெண் ஊழியர் மீது தீடீரென்று சுடுதண்ணீரை அப்படியே முகத்தில் ஊத்தினார்.
இதைக் கண்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன், அதுமட்டுமின்றி நூடுல்ஸ் கப்பையும் முகத்தில் வீசினார். அப்போது என்ன என்று கேட்ட போது, அவருடைய காதலனுக்கு அருகில் இடம் தரவில்லை என்ற ஆத்திரத்தில் அவர் அப்படி வீசியதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின் விமானம் விமானநிலையத்தில் தரையிரங்கியவுடன், இந்த சமப்வம் குறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதால், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவருக்கு குறித்த விமானநிறுவனத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.