ஒரு தலைக்காதலுக்கு பெயர் போனவர்., இந்த நிறத்திற்கு சொந்தக்காரர்.!

பச்சை நிறத்தை விரும்பும் அதிக நபர்கள் மிகவும் சாதுவாக இருக்க கூடியவர்கள். இவர்கள் அதிகம் பேசாமல் அமைதியாகவே இருப்பார்கள். இதனால், இவர்களின் உணர்வுகளை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

மனதில் இருக்கும் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தவும் மாட்டார்கள். மேலும், இவர்கள் மனதில் காதல் இருந்தால் கூட அதை வெளிப்படுத்துவது கடினம் தானம்.

ஆனால், பச்சைநிறம் பிடித்தவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்குமாம். இவர்கள் ஒரு செடி ஒரு பூ ரகத்தினை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

மேலும், இவ்வகை நபர்கள் அதிகமாக ஒருதலைகாதலில் உருகி கொண்டிருப்பவர்களாக இருப்பர். இவர்கள் மனதில் உள்ளதை சொல்லவும் மாட்டார். அவர்களே வந்து கூறினாலும் அதை ஏற்கும் அளவிற்கு இவர்களுக்கு தைரியமும் இருக்காது.

ஆனால், அவர்களை தான் உருகி உருகி காதலித்து பின்னால் கல்யாணத்தில் வாழ்த்து கூறிவிட்டு வரும் ஜீவனாக இருப்பர். ஆனால், இவர்கள் வேறு யாரை திருமணம் செய்து கொண்டாலும் அவர்களை மனப்பூர்வமாக நேசிக்கும் ஆற்றல் கொண்டவர்.

தங்களது துணைக்காக அமைதியாக எதையும் செய்து விட்டு அவர்களை சந்தோஷப்பட வைத்து அதில் சந்தோதம் காணும் உள்ளதை படைத்திருப்பார்களாம்

அவ்வளவு எளிதில் எதையும் சலித்துவிட்டது போல் உணர மாட்டார்கள். அமைதியாகவே இருந்தாலும் பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பர். முடிவெடுப்பதில் சிறந்து விளங்குவர்.

தவறான முடிவு எடுத்து விட்டாலும் அதை சரி செய்யவே போராடும் குணம் கொண்டிருப்பார். நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டவராக இருப்பர்.