தாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.