திருமணமான ஒரு மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் சொன்ன கணவன்!

திருமணமான ஒரு மணி நேரத்தில் மனைவியை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ள சம்பவமொன்று ராஜஸ்தானில் இடம்பெற்றுள்ளது .

ராஜஸ்தானின் தோல்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்பவர் ஷூ ஷோரூம் ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் அவருக்கும் , பல் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வரும் ஆக்ராவின் ஹரிபர்வத் பகுதியை சேர்ந்த ரூபி என்ற பெண்ணிற்கும் கடந்த15 ம் தேதி அன்று இரவு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது ரூபியின் வீட்டாரிடம் வரதட்ணையாக கார் வேண்டும் என நதீம் கேட்டுள்ளார்.

எனினும் கார் தராததால், திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில், மவுலவி முன்னிலையில் மூன்று முறை “தலாக்” கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில் தங்களின் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி ரூபியின் வீட்டார் கெஞ்சியும் அவர் மனம் இரங்கவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து ரூபியின் வீட்டினர் நதீமின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, அவர்கள் கற்களை வீசி தாக்கியதால் ரூபியின் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து நதீம் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்த போது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.